நல்ல அரக்கு நிறத்தில் ஆரஞ்சு வர்ண பார்டர் வைத்த பட்டுப் புடவையில் மதுமிதா தேவதையாக ஜொலித்தாள். கிறிஸ்டல் மற்றும் மணி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆரஞ்சு நிற ஜாக்கெட் இன்னும் அவளின் அழகை கூட்டியது. இடையை மீறி நீண்டிருந்த கருநாகம் போன்ற நீண்ட ஜடையில் மூன்று வரிசைகளாக தொங்கவிடப்பட்டிருந்த மொட்டு மலராத மல்லி சரசமாடி கொண்டிருந்தது. குறுகிய நெற்றியும், வகிட்டில் வைக்கப்பட்ட சிகப்பு நிற குங்குமமும் அவள் அழகை மேலும் துலங்கச் செய்து பிரகாசமாக்கின. அவள் அழகிற்கு தானும் சளைத்தவனில்லை என காட்டிக் கொண்டான் வாசுதேவன். வானம் கொண்ட நீலநிறத்தில் கறுப்பு கட்டம் போட்ட முழுக்கை சட்டையும், அடர்ந்த கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்டும், தூக்கி வாரிய ஹேர் ஸ்டைலும் அவனை ஆணழகனாக்கின.
"என்னடா மது, ரெடியா? இதோ, அதோன்னு சொல்லி ஒரு மணி நேரமாச்சு. உன் அண்ணன் குழந்தையை தொட்டிலில் போட தான் போறோம். நீ வரும் வேகத்தை பார்த்தால் பிறந்த நாளுக்கு தான் போவோம் போலிருக்கே" என்று பரிகாசம் செய்தான்.
"சாரிபா. இதோ ரெடியாயிட்டேன். புது பட்டுப்புடவையில கொசுவம் வைக்க வரல. அதான் லேட் ஆய்டுச்சி. நீங்க காரை ஸ்டார் பண்ணி வைங்க. நான் வீட்டை பூட்டிட்டு வரேன்"
மதுமிதாவும், வாசுதேவனும் காதல் மணம் புரிந்தவர்கள். இருவரும் ஒரே ஜாதியாக இருந்ததால் திருமணம் யார் தடையுமில்லாமல் இனிதே முடிவு பெற்று வருடம் பத்தாகி விட்டது. யார் கண்பட்டதோ இந்த ஆதர்ச தம்பதிகள் கொஞ்சி மகிழ குழந்தை செல்வம் இல்லை. வாசுதேவன் செல்வத்தில் திளைப்பவன். வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லாதவன். இருந்தாலும், தந்தை விட்டுச் சென்ற ஏற்றுமதி, இறக்குமதி தொழிலை திறம்படவே நடத்தி வருகிறான். உடன் பிறந்தவர்கள் என்று யாருமில்லை. வாசுவுக்கு பத்து வயதாக இருக்கும் போதே அவனை பெற்றவள் உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டாள். தந்தையும் இவனுக்கு மணம் முடித்த கையோடு புண்ணியஸ்தலங்கள் நோக்கி பயணப்பட்டார்.
மதுமிதா முற்போக்கு சிந்தனை கொண்டவள். குழந்தை இல்லை என்ற வருத்தம் உள்ளுக்குள் இருந்த போதிலும் அதை வெளிக்காட்டி கொண்டதில்லை. அப்படி வெளி காட்டிக் கொண்டால பார்ப்பவர்களின் இரக்கத்திற்கு ஆளாக கூடும் என்பதால் அதை தவிர்த்தாள். குழந்தை இல்லை என்பதற்காக ஒருபோதும் சாமியையோ, சாமியாரையோ நாடிச் சென்றதும் இல்லை. அவளுடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், ஒரு தங்கை. அண்ணனுக்கு போன தையில் தான் திருமணம் முடிந்திருந்தது. இதோ குழந்தையும் பெற்று தொட்டிலில் போட போகிறான். தங்கைக்கு திருமணமாகி பத்தாவது மாதமே பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். இப்போது அந்த குழந்தைக்கு ஒரு வயதாகிறது.
வாசுவும், மதுமிதாவும் விசேஷத்துக்கு வந்து இறங்கிவிட்டார்கள். சம்பிரதாய விசாரிப்புகள் எல்லாம் முடிந்து அனைவரும் குழந்தையோடு தொட்டிலருகே சூழ்ந்தனர். வயதில் மூத்த பழம் ஒன்று குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு அதன் காதில் பெயரையும் கிசுகிசுத்துவிட்டு சென்றது. "கொழந்தைக்கு அத்தைங்க வந்து கொழந்தே காதுல பேரை சொல்லிட்டு போங்கோ" என்று அழைத்தவுடன் மதுமிதா கணவனுடன் தொட்டிலருகே சென்றாள். அதை பார்த்து அங்கிருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் குசுகுசுவென பேசிக்கொண்டனர். அந்த சமயம் பார்த்து மதுமிதாவின் தாய் பொற்கொடி அவளை தடுத்து, "மது, நீ முதல்ல போக வேண்டாம்மா. உன் தங்கை போகட்டும். எல்லாரும் முடிச்ச பிறகு நீ போ. நான் சொல்ல வர்றது உனக்கு புரியும்னு நினைக்கறேன். எல்லாம் குழந்தையோட நன்மைக்கு தான்மா சொல்றேன்" என்றதை கேட்டு மதுமிதாவிற்கு நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சியது போன்றிருந்தது. அப்படியே பின்னோக்கி வந்து நின்றாள்.
http://girls-tamil-actress.blogspot.com
http://meena-tamilsexstory.blogspot.com
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.